கேட்காத கேள்வி ஒன்று
யாரோ எறிந்த விதை விருட்சமாக
யாரோ எறிந்த நெருப்பு தீக்காடாக
யாரோ எறிந்த கல் கலவரமாக
யாரோ எறிந்த வார்த்தை வதந்தியாக
யார் எறிந்தது கேள்விகள் இங்கில்லை
யார் பொறுப்பு கேள்விகள் இங்கில்லை
ஏதும் அறியா மானிடர்கள்
ஏக்கத்துடன் தவித்திடுவர்
ஏகாந்தம் ஏதும் இன்றி துயின்றிடுவர்
எறிந்தது ஏதேன்று எவருக்கும் தெரியாது
ஏன் என்ற கேள்வியும் எழாது
எத்தனை காலம் தான் குனிந்திடுவர்
ஏமாற்றங்களை இவர் ஏற்றிடுவர்
கேடுகெட்ட மானிடர்களிடம்
கேட்காத கேள்வி ஒன்று
கேளாத இருகாது இருந்து என்ன பயனோ...?
வார்த்தையதனை உதிர்க்காத நாவும் பயனோ?
விழிக்காத வாழ்வதும் வாழ்வது பயனோ..?
வாழ்க்கை அதனை அடகுவைத்து
வாழ்வுதான் ஏனோ...?
கேள்விகள் பல இங்கிருக்க
கேளிக்கைதான் ஆனதோ
மனிதா உன் வாழ்வும்...
பலரின் கேளிக்கை தான் ஆனதோ...??