பிறை நிலா

உன் மொழி
நான் அறியா மொழி
விதி வசத்தால் சந்தித்தோம்...
விதியினாலே பிரிந்தோம்....

என் தேடல்கள்
முற்றுப் பெறாமலே..?
வருடங்கள் வளர்பிறையாகின
தேய் பிறை அறியாமலே.. ?

உன் பிறை நிலா
நெற்றி விதவையாக...
உன் காது மடல்கள்
என் இரசிப்பிழந்து...
பெண்ணே நீ..
நிம்மதியா அங்கு..?

உன் இரயில்பயணத்தின்
புகைப்படம் கண்டேன்
கேட்கத்தான் ஆசை
உன் நிலையை....
ஏனோ மறுக்கின்றது
என் மனம்...?

உன் பிறை நிலா
நெற்றி விதவையாக....?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (26-Feb-19, 8:38 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : pirai nila
பார்வை : 127

மேலே