விழித்திரு வாளெடு
#விழித்திரு… வாளெடு..
மாலிக்காப்பூர் மடையன் வந்தான்
களிமண் மண்டை நிறைத்து
போரில் வெறியைக்காட்டி னானே
கோவில் சிற்பம் உடைத்து .!
அற்புதக் கலையை அழித்த அவலம்
அந்த நாளிலும் உண்டு
மூலிச் சிலைகளை கோவிலில் கண்டு
மனமொடிந்து போனதென் நெஞ்சு..!
முதலுக்கிங்கே மோசம் அய்யோ
வரலாறும் மாறும் போக்கு
முட்டிமோதிப் பார்ப்போம் நாமும்
முயன்று ஊரைக் கூட்டு..!
தமிழை அழித்து இந்தி வளர்க்கும்
தறுதலைக் கூட்டம் பார்த்து
துடைப்பம் செருப்பில் மலத்தைத் தோய்த்து
துடிப்படங்கும் வரையில் சாத்து..!
கண்ணை மூடிக் கிடந்தால் போதும்
கோவிலும் களவு போகும்
ஊரான் மனைவி சொந்தம் என்று
உரிமை எடுப்பான் போலும்..!
வீடு நுழைந்து விரட்டும் முன்னே
கத்தி புத்தியைத் தீட்டு
வருவது வரட்டும் வீரம் கொண்டு - இந்தி(த)
வெறியரை நாடு விரட்டு..!
#சொ. சாந்தி