சிந்தித்து வாக்களிப்பீர் 15 4 2019

சிந்தித்து வாக்களிப்பீர்.....

உயிரினும் மேலான என் உடன் பிறப்புக்களே
உங்கள் வாக்கு வீரிய வஜ்ராயுதம்
அக்கிரமங்களை அராஜகங்களை அடியோடு அறுக்க
ஜனநாயகம் நமக்களித்த வலிய வேலாயுதம்

எட்டா உயரத்தில் விலைவாசி
போதாதக் குறைக்கு GST
சிறுதொழில்கள் முற்றிலும் நாசம்
வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆட்டம்

நீட் தேர்வால் பல அனிதாக்கள் மரணம்
எட்டுவழிச் சாலையால் விளைநிலம் அபகரிப்பு
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவிகள் உயிர்ப்பலி
மரித்த உயிர்களுக்காய் மாரடித்து அழுதோம்

பணமதிப்பிழப்பால் நாற்சந்தியில் திரிந்தோம்
கஜா புயலால் நடுவீதியில் உழன்றோம்
பொள்ளாச்சி பூதாகரத்தால் கதிகலங்கி நின்றோம்
பார்வையாளர்களாய் ரசித்தது மத்திய மோடியரசு
பல்லாக்குத் தூக்கியது மாநிலப் பேடியரசு

மானமுள்ளத் தமிழினமே மறவாதே மன்னிக்காதே
மதிக்கெட்ட இவ்வீணர்களின் சதியில் வீழாதே
மண்டியிட்டு இன்று ஓட்டுக்காய் கையேந்தும்
மதவெறி காவிகும்மலை ஓட ஓட விரட்டு
உன் வாக்கே அதற்கு துருப்புச் சீட்டு

இலவசத்திற்கு கையேந்தினால்
உன் இயலாமை அங்கே இழிவாக்கப்படும்
காசுவாங்கி வாக்கை விற்றால்
உன் உரிமை அங்கே விலைபோகும்
மிரட்டலுக்கு அஞ்சி வாக்களித்தால்
உன் வீரவரலாறு அங்கே தலைகுனியும்
சாதிமதம் சார்ந்து வாக்களித்தால்
உன் சுயநலம் அங்கே பிரகடனமாகும்...

சிந்தாமல் சிதறாமல் மறவாமல் தவறாமல்
ஒற்றைவிரல் ஆயுதத்தை சரியாக பிரயோகிப்பீர்
தமிழினம் தழைத்திட தன்மானத்தோடு வாழ்ந்திட
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்!

நமதுச் சின்னம் உதயசூரியன் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Apr-19, 3:18 pm)
பார்வை : 29

மேலே