நிழல் நாக்கு

காற்றில் தவித்த
அந்த இலைகளும்

சப்தத்தின் நுனியில் இருந்து
காற்றை தேடுகிறது.

பூக்கள் இதழ்களின்
சுருள் வாசனையில்
காற்றுக்குள் மோதுகின்றன
டால்பீன் தாவல்களுடன்.

மரத்தில் மிதக்கும் காற்று
இலையின் அருவி.

நழுவும் காற்றுக்குள்
கனவொன்றை வரைகிறது
மரப்பல்லிகள்.

இலைகளில் குதித்த காற்றுக்குள்
அதிரும் எறும்புகளின் புணர்வு.

வேர் தேடி வழிந்த
காற்றெல்லாம் நனைந்தது
புழுதியின் துவர்ப்பில்.

மரம் பேசாது நிற்கிறது
நாவால் நிலம் துடைத்து.

எழுதியவர் : ஸ்பரிசன் (25-May-19, 9:28 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : nizhal naakku
பார்வை : 66

மேலே