நயம்பட எதைக்கேட்பின்

பதறுகின்றது மனம் பலபல நிகழ்வைக்கண்டு
குருடன் கையில் கிடைத்த ஊத்தாப்பமாய்

நீரும் இல்லை நிறைவான சோறும் இல்லை
நீல வானத்தின் வெப்பம் என்றும் குறைவதாய் தெரியவில்லை

ஆளுவோரும் ஆளத்துடிப்போரும் இந்நிலையை எண்ணவில்லை
அனைத்து நேரத்திலும் கொள்ளையரின் தொல்லை

நயம்பட எதைக்கேட்பின் நியாயமான பதிலில்லை
ஞாலத்தில் எந்நாளும் நடந்தேறும் காமகொலை

நாட்டின் முதுகெலும்பாய் இருந்ததொழில்
நலிவடைந்து பாதாளம் வீழ்ந்த நிலை

தீருமோ இந்த நிலை தென்படுமோ தெளிந்த நிலை
திரவியங்கள் சேரும் வரை உழைக்கட்டும் திருக்கரங்கள்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Jun-19, 4:58 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 34

மேலே