மாசுச-சோகப்படாதே

இரண்டாம் முறை தரிசனம் செய்தேன்‌ இன்று..!!

பெற்றோர்களுடன்..!!


என்னதான் சிறப்பு தரிசனம் என பெயரிட்டாலும் அதே நேரம் அதே தூரம் நின்றுதான் ஆக வேண்டும்..!!

பெரியோர்கள் திடமுடன் நிற்க வேண்டும் என பிரார்த்தித்தபடி நான்..!!
(சம்சாரம் யாரைவிட்டது..?)

பக்தியில்லை
பயம் தான் இருந்தது..!!
பதட்டம் இருந்தது..!!
இவர்களை எண்ணி..!!

வரிசை பிரிந்தது..!!
எங்கு இருப்பார்களோ என்ற கவலையுடன் நகர்ந்தேன்..!! கூட்டத்தில் ஒருத்தர் கைப்பிடித்து இழுத்தார்..!
அவர்களுக்கு பின் அம்மா அப்பா..!!
தரிசனம் செய்யும் இரு நிமிடம் முன் சேர்த்து கொண்டோம்..!!

நிம்மதியுடன் பெருமாளை நெருங்கினேன்..!!

கொஞ்சம் அருகில் பார்த்தது போல்..!!

அள்ள அள்ள குறையாத அக்ஷயமாய்..

தெள்ளத் தெளிவுடன்
தெவிட்டாத தெள்ளமுதாய்..

உள்ளக் கவிதன்னை ஊக்குவிக்கும் உள்ளுணர்வாய்..

திண்ண திண்ண திகட்டாத புதுத்தேனாய்..

என் கல் நெஞ்சத்தையும் கரைத்து கண்கள் கசிய செய்த கருந்தூணாய்..

எம்பெருமாள்..!!

"நம்பினார் கெடுவதில்லை
நான்மறை தீர்ப்பு"
என்பார்கள்..

ஆனால் இவ்வுலகில்..

"நம்பினார் கெடுவதில்லை நாராயணனை மட்டும்" என்பது என்‌ ஈர்ப்பு..

"மாம் ஏகம் சரணம் விரஜ:"-(நான் ஒருவனே-என்னையே நினை-தொழு-நான் பார்த்துக் கொள்கிறேன்)

நான் பயந்தது வீண் என நிரூபிப்பது போல் அவர்களும் நன்கு தரிசனம் பெற்றனர்..!!

"மாசுச:--சோகப்படாதே" என அவர் கையில் பொறிக்கப்பட்ட‌ வார்த்தை மட்டும் நினைவிற்கு வந்தது..!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (11-Jul-19, 8:56 am)
சேர்த்தது : பகவதி லட்சுமி
பார்வை : 37

மேலே