தூது

என் தோழியின் துணை
பகல் முழுதும்

நேரம் போக அவனைப்
பற்றியே பேசுவேன்

அவளிடம்

என்னவன் துணை இன்றி
நாள் முழுதும்

உறங்க முடியாது புலம்பித்
தீர்ப்பேன்

இரவிடம்

என் செய்வேன் அன்னமே

என் நிலை உரைப்பாயோ
என்னவனுக்கு

அவன் துணைக்கு ஈடாகா

என்று நான் உரைத்ததை?

விரைந்து போ அவனுக்கு
விளக்கி சொல்

நான் அவனுக்காக
காத்திருப்பதை

எழுதியவர் : நா.சேகர் (20-Jul-19, 7:06 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thootu
பார்வை : 70

மேலே