மழைப்பெண்

யாழிடி கொலுசொலி எழுப்பிடும்
சத்தத்தில் கிளம்பினாய் என்றுணரவா ?

இமை மின்னலை வெட்டிட
வாசம் ஏறும் மண்ணைப்போல் மயங்கி போகவா ?

ஈசலெல்லாம் படைகொண்டுதான்
என் வாசல்வரை எட்டிப்பார்க்குதே

காற்றெல்லாம் எப்போதும் போலவே
ஈரப்பதமேற்றி உனை வரவேற்குதே

ஏங்கிப்போன என் மண்மீதெல்லாம்.....
வறண்டுபோன என் தேசமெங்கும்.....
கட்டி அணைக்கப்போகும் சாரலே !

எழுதியவர் : Ramkumar (23-Jul-19, 11:28 am)
சேர்த்தது : kavidhai yasagan
பார்வை : 1869

மேலே