முயற்சி செய் பெண்ணே - சகி
பெண்ணே
முயற்சி செய்தால்
முடியாதது என
ஒன்றும் இல்லை இவ்வுலகில்...
மறு ஜென்மம் எடுக்கும்
தாய்மையை நாம் வென்ற
பிறகு நம்மால் முடியாதது
என எதுவுமில்லை இவ்வுலகில்...
பெற்றவன்
பொறுப்பில்லாதா
தந்தையோ...
கரம் பிடித்தவன்
உண்மை இல்லாத
கணவனோ....
காதல் கொண்டவன்
ஏமாற்றிய கயவனோ....
எதையும் நினைத்து
கலங்காதே....
ஒரு பெண்
பல்லாயிரம் ஆண்களின்
வீரத்திற்கு சொந்தக்காரி....
தன்னம்பிக்கையும்
தளராத மனமும்
எதையும் எதிர்கொள்ள முடியும்
என உன்னை நீயே
செதிக்கிக்கொள் ஒரு
பெண் சிற்பமாக......
கண்ணாடியாக இரு...
யார் எப்படி
உன்முன் தோன்றினாலும்
அப்படியே பிரதிபலிப்பு கொடு....
கண்ணாடி சிதறினால் கூட
தொட அஞ்சுவார்கள்....
சற்று தவறுதலாக
கையாண்டாலும்
அதன் துகள்கள்பட்டு குருதி வருமென
அனைவரும் அஞ்ச வேண்டும்....
உன்னை நீயே
கொஞ்சம் கொஞ்சமாக
செதுக்கிகொள் பெண்ணே....