பிறவிப் பணக்காரர்கள்

சுவாசிக்கும் காற்றின்
அருமை தெரிந்தோரெல்லாம்...

சூரிய ஒளியின்
முக்கியம் புரிந்தோரெல்லாம்...

அருந்தும் தண்ணீரின்
அவசியம் உணர்ந்தோரெல்லாம்...

நெருப்பின் இருப்பின்
தார்ப்பரியம் அறிந்தோரெல்லாம்...

பூமியை சாமியாய்
நினைத்து நெகிழ்ந்தோரெல்லாம்...

பிறவிப் பணக்காரர்கள்...
வாழும் செல்வந்தர்கள்...

இவர்களுக்கு வானமும்
வசந்தமும் வசப்படும்...

அனைவருக்கும் இனிய
காலை வணக்கம்...
😃👍💐🙏👏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (5-Dec-19, 5:25 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 129

மேலே