அப்பா

என் அப்பாவிற்கு

கடவுளையும் கருவறையும்
உன்னால் இங்கு நான் கண்டேனே
நீ காணாத கனவினையும்
நினைவுகளையும்
என் இதயத்தோடு சொன்னாயே
கரம் பிடித்து நடை தந்தாய்
நான் கடந்து செல்ல பல விடை தந்தாய்

வெற்றியோடு வந்தாலும்
வெறும் கையோடு வந்தாலும்
கட்டி அணைத்து கொள்வாயே
நான் மீண்டும் முட்டி எழ செய்வாயே

ஏக்கம் பல உனக்கு இருந்தாலும்
தூக்கம் பல துளைத்து
நான் வீழாமல் நிற்க்க
என் வேறாக இருப்பாயே
என்ன்றும் நிழலாக நடப்பாயே

கதை என்றாலும் சரி
கற்பனை என்றாலும் சரி
நீயே என் நாயகன்
என்றும் நான் போற்றும் தலை மகன்

எழுதியவர் : செந்தில் குமார் அ (24-Jan-20, 4:50 pm)
சேர்த்தது : sendil
Tanglish : appa
பார்வை : 2860

மேலே