காரோணவை விரட்டுவோம்

உலகை உலுக்கும் கரோனவே
உனக்கு துணிச்சல் இருந்தால் முகம் காட்டு
கீரிடம் சூடியதால் கிறங்க வைக்கின்றாய் உலகை
யாரிடம் காட்டுக்கின்றாய் உன் இலக்கை
ஹுவானில் குடியேறிய உன்னை
குழிதோண்டி புதைக்க
வெள்ளை உடையில் கடவுள்கள் வீதியில்
துர்நாற்றத்தினை தூர விரட்டும் தூயவர்கள்
கண் இமை போல் செயல் படும் காவலர்கள்
காலத்தாலும் மறக்க முடியாத செவிலியர்கள்
தகவலை தடையின்றி தரும் வல்லுநர்கள்
சீறி பாயும் எங்கள் விஞ்ஞானிகளின் ஆய்வை
சீக்கிரம் வெளிவர இருக்கும் முடிவை
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும்
உன்னை அதில் உடன்கட்டை ஏற்றும்
உயிரை களவாடும் காரணியே
உனக்கு காற்று கரம் கொடுப்பதால்
என் மூச்சு காற்று நஞ்சாகின்றது
சுவாசத்தில் வாசம் செய்யும் உயிர் திருடியே
சுணங்கமாட்டோம் உன் உடலை வதம் செய்ய
கவசம் இல்லையென்றால் நீ ஆடுவது கரகம்
கை சுத்தம் இல்லையென்றால் நாங்கள் போவது நரகம்
கூட்டம் போட்டால் கூண்டோடு போய்விடுவோம்
தனித்திருந்தால் உன்னை தறி கேட்டு ஓட செய்வோம்
பிஞ்சு குழந்தைகளும் பழுத்த வயதினரும் உன் உணவு
நஞ்சு கக்கும் உன் சகவாசம் நீக்க என் கனவு
மருந்து இல்லையென்று நீ மமதையில் இருக்கிறாய்
மருத்துவ விஞ்ஞானத்தின் மகிமையால் நீ அழியப்போகின்றாய்
நீ எங்கே வந்தாய் என்பது வாதம் அல்ல
உன்னை எப்ப அனுப்புவது என்பது தான் விவாதம்
விலங்குகள் மூலமாக உன் விலாசம் அறியப்பட்டால்
விலக்க வேண்டியது அதை உணவில், உணர்வில்
வாரிசுகளை காக்க வேண்டும் என்றால்
நீ வாசம் செய்யும் அணைத்து பொருளையும்
தவிர்க்க தவம் இருப்போம்।
தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை குடிக்கும் எமனே
திறமையாக உன்னை BCG தடுக்கும் மவனே
ஆயுர்வேத மருந்துகள் உன் ஆயுளை முடிக்க தயாராக உள்ளது
ஆர்ப்பரித்து எழுவோம் , இவனுக்கு முடிவுரை எழுத
புரந்தங்களால் நம் நோய் தடுப்பு
புரிந்துகொண்டதால் இதற்கு கடுப்பு
சமுதாய விலகல் சரியான தீர்வு
தனித்து இருத்தல் தக்க வைக்க நிலையான தீர்ப்பு
ஆள்பவர்கள் அறிஞர்கள் பேச்சை கேட்போம்
அனைவரின் மூச்சை காப்போம்
ஒழிக்க வந்த உயிரினை ஓட வைப்போம்
செழிக்க வைப்போம் நம் திருநாட்டினை

எழுதியவர் : நவராஜ் பெருமாள்சாமி (3-Apr-20, 11:16 am)
சேர்த்தது : Perumalsamy1955
பார்வை : 88

மேலே