மீன்மீனில் தோற்றது கண்ணே

மீன்குழம்பு வாசம் மெலிதாக வீசிவர
மீன்விழியாள் கூந்தலில் மல்லிகை சூடிவர
வான்தென்றல் ஏந்திவந்த மல்லிகை வாசமும்
மீன்மீனில் தோற்றதுகண் ணே !

பொருள் குறிப்பு :

மீன் = மீன் விழியாள்

மீனில் = மீன்விழியாள் வைத்த மீன் குழம்பில்

இது யாப்புக் குழம்பு . ஒருவிகற்ப இன்னிசை வெண்பா வடிவம்

பாடல் குழம்பு :

கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்படத்தில் இரண்டு மணக்கும்
பாடல் எழுதியிருப்பார்

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய்மணக்கும் கத்திரிக்காய்
நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா
(இன்னிக்கு வச்ச மீன் குழம்பே அப்படி மணக்கும்
இது நேத்து வச்ச மீன் குழம்பு ....கேட்கவா செய்யணும் ? !!

மற்றொன்று :
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா ....
(அற்புதமான பாடல் வரிகள் இசை

எழுதியவர் : கவின் சாரலன் (25-Apr-20, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே