அவள்

மை இட்ட கண்ணோ இவை
இல்லை மை ஏதும் இடாது
மை இட்டதுபோல் இருக்கின்றன
அதரத்தில் சிவப்பு சாயமா
இல்லை சிவந்திருக்கின்றன
கொவ்வைப் பழம் போல
மஞ்சள் பூசிய முகமோ
இல்லை பசும்பொன் நிற முகத்தாள் அவள்
அவள் சிரிப்பில் முல்லைச்சரம்
இல்லை இவள் சிரிப்பில் முல்லைக்கு காண்கிறது
இவள் சிரிப்பாள் முல்லை உயர்ந்தது
காணாததுபோல் இவள் இடை கொடியா
இல்லை இவள் இடையால் கொடியும் உயர்ந்தது
சிவந்த தாமரையோ இவள் பாதம்
தாமரைக்கு உயர்வு இதனால்
இவள் இளம் நகில்கள் கலசங்கள்
கலசங்களுக்கு மேன்மை ......

கன்னி அவள் அழகின் களஞ்சியம்
இயற்கையாய் அழகு அவள் அங்கமெல்லாம்
பூத்திருக்க பூக்களெல்லாம்
இவளை பார்த்து நாணும் பூவை இவள்
இவள் இயற்கை அன்னையின் பெருமிதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Apr-20, 1:42 pm)
Tanglish : aval
பார்வை : 89

மேலே