கவிஞன் கள்வனாய்

என்னவள் தினமும்
குறைந்தது ஆயிரம் கவிதைகளாவது
வேண்டும் என்பாள்!

நான் எங்கு போவது
தினம் ஆயிரம் கவிதைகளுக்கு..
இருந்தாலும் அவளிடத்தில்
'கவிஞன்' என்ற என் பெயர்
கெடாமல் இருக்க..

என் பேனா பிடித்து
ஒரே ஒரு கவிதை மட்டும்
காகிதத்தில் கிறுக்கிவிட்டு..
மீதமுள்ள கவிதைகளை
என் இதழ்களை கொண்டு
அவள் கன்னத்தில் கிறுக்குவேன்🥰
கவிஞன் நான் சிலநேரம் கள்வனாய்!!!😜

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:11 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kavingan kalvanaai
பார்வை : 335

மேலே