தெத்துப்பல்லு பேரழகி
டாக்டர்
எல்லா பல்லும் விழுந்திடுச்சு...
எப்படியா.. ?
எல்லா பல்லும் ஒரே நேரத்துல விழுந்தது...?
அடி
ஒரே நேரத்துல வேகமா விழுந்தது டாக்டர்
அதான்
எல்லா பல்லும் ஒரே நேரத்துல விழுந்தது
யாருய்ய உன்ன அடிச்சா..?
வேறு யாரு டாக்டர் என் பொண்டாட்டிதான்...
அப்படி
என்னய்ய பன்ன..?
அவ ஒரு கேள்வி கேட்ட டாக்டர்
என்னய்ய கேள்வி..?
என்னங்க
நம்ம காதல் எந்த அளவுக்கு ஊருக்குள்ள பரவியிருக்குன்னு கேட்டா
நான் அதுக்கு
கொரோனா வைரஸ் அளவுக்கு பரவியிருக்குன்னு சொன்ன -
அதான்... ஓங்கி வாயில குத்துனா
மொத்த பல்லும் கொட்டிப்போச்சு..
உனக்கு தேவைதாய்யா...
உதாரணத்துக்கு வேறு எதுமே கிடைக்கலையா..
சரி... சரி...
உனக்கு முத்துப்பல் செட்டு வேணுமா..?
இல்ல தெத்துப்பல் செட்டு் வேணுமா..?
டாக்டர் - எனக்கு
முத்துப்பல் செட்டும் வேணா..
தெத்துப்பல் செட்டும் வேணா..
எனக்கு - இந்த
பொக்கப் பல்லே போதும்..
வாய க்ளீன் பன்னிட்டு-
வலிக்கு மருந்து கொடுங்க போதும்..
ஏன்ய்ய அப்படி சொல்ற
பொக்கப் பல்லே பேதும்னு..
அதுவா டாக்டர்
என் பொண்டாட்டிக்கும் பொக்கப்பல்லு அதான்...
என்னய்ய பொண்டாட்டிக்கும் பொக்கப்பல்லா...?
ஆமா டாக்டர்
போன வாரம் போட்ட சண்டையில, நான்தான் வின் பன்ன
நான் அடிச்ச அடியில
என் பொண்டாட்டியோட
எல்லா பல்லும் விழுந்திடுச்சு
இப்ப நானும் பொக்கப்பல்லு
அவளும் பொக்கப்பல்லு
மேட்ச் ஆயிடுச்சு...
நல்லா பொருத்தமான ஜோடிதாம்ப்பா..
ஆமாம் டாக்டர்...
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?
இல்லை..
ஏன் கேட்கிறா..?
இல்லை -
எங்க சைடு ஒரு தெத்துப்பல்லு சிரிப்பழகி இருக்கா...
நீங்க ஓகே சொன்ன முடிச்சில்லா.. அதான்...
எப்ப சாமி
நீ ஆளை விடுடா
ஃபீஸ கொடு... நடைய கட்டு....!!!
( விட்டா நம்மல பொக்கப்பல்லாக்கி -உட்கார வச்சிடுவானுங்க போல )
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி