நட்பின் நினைவலைகள்

நட்பின் நாட்களை எண்ணி
கண்மூடி கிடக்கின்றேன்
கண்முன்னே விரிந்தது
கனவொன்றுமில்லை
நிஜமேயானாலும் அந்நாட்கள்
இன்றில்லை உறக்கத்தில்
களைந்த அழகான கனவைப்போல்
அழகேயானாலும் அரைகுறையாய்
களைந்திட்ட ஓவியம்போல்
நொடிப்பொழுதில் கடந்திட்டதே.
பள்ளி, கல்லூரி நாட்கள்தொட்டு
நாம் வாழும் நாட்களெல்லாம்
என்றென்றும் இனியவையாய்
நட்போடு கலந்திட்டோம்
பருவங்கள் மாறினாலும்
அகவைகள் கூடினாலும்
நட்போடு துணையானோம்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
நட்பின் ஆழம் காணோம்.
பள்ளி நாட்கள் தொட்டு
அ, ஆ உயிரெழுத்தோடு
தொடங்கிற்று நட்பு வளர்ந்து
பருவமெய்து மேல்வகுப்பு சென்றாலும்
மலை தொடராய் நீண்டது நட்பு
பள்ளி வளாகத்தை தோளோடு
தோள் சேர்த்து கதை பேசி
அளந்திட்டோம்.
பண்டக சாலை சென்று பண்டங்கள்
பல வாங்கி பிடுங்கி திண்பதிலோர்
இன்பம் கண்டோம்.
பசி, தாகம் மறந்து அரட்டைகளை
தொடர்ந்து, ஆனந்தமாய் கழித்திட்டோம்.
நட்பின் நினைவலைகளை பகிரலாம்
என்றெண்ணி தொடங்கிட்டேன்
வரிகள் நீளுகிறது இது ஒரு
முன்னுரையிலும் முன்னுரையே
இன்னும் கல்லூரி நட்பினை
என்னவென்று நான் சொல்ல?

எழுதியவர் : நிஜாம் (1-Jul-20, 12:18 pm)
சேர்த்தது : நிஜாம்
பார்வை : 333

மேலே