நெஞ்சங்கள் வந்து கவிதைப் பக்கங்களைத் திருப்பும் என்று
![](https://eluthu.com/images/loading.gif)
மலர்கள் வாடிவிடும் என்று
நீரூற்றுகிறான் தோட்டக்காரன்
மலர்கள் வாடுமுன் விற்கவேண்டும் என்று
சந்தைக்கு எடுத்துச் செல்கிறாள் பூக்காரி
கவிமலர்கள் வாடுவதுமில்லை யாரையும் தேடுவதுமில்லை
சிரித்தே வாழ்ந்திருக்கும் ரசிப்பவனுக்கு மட்டும் !
கவிதை ரசிப்பவனுக்கே ரசிப்பவனுக்கு மட்டுமே !
ஷெல்லியும் கீட்சும் பாரதியும் தாசனும்
கம்பனும் வள்ளுவனும் இன்றும் சிரித்தே வாழ்ந்திருக்கிறார்கள்
நெஞ்சங்கள் வந்து கவிதைப் பக்கங்களைத் திருப்பும் என்று ...