விருந்துக்கும் மருந்துக்கும்
செந்தமிழ் நாட்டினிலே திரவியங்கள் பல உண்டு
திறம்பட தேடுவோருக்கு தீர்க்கமான பலன் உண்டு
நெஞ்சை கொஞ்சும் தமிழ் அறிந்தால் விளக்கம் நீள உண்டு
அறிந்து கற்றோருக்கு ஆற்றலான வாழ்க்கை உண்டு
விருந்துக்கும் மருந்துக்கும் மொழியில் வழியுண்டு
வழித்தவறி நடப்போருக்கு நல்வழிகாட்டும் நூல் உண்டு
கடமைக்கும் பொறுப்புக்கும் கச்சித விளக்கம் உண்டு
தப்புக்கும் தவறுக்கும் தரமான விளக்கம் உண்டு
வம்புக்கும் சண்டைக்கும் வளமான பொருள் உண்டு
அள்ள அள்ள குறையாத அமுதசுரபி தமிழாகும்
அதைக் கற்றுத் தெளிந்துவிட்டால் ஆயுளும் நீளமாகும்
தெளிந்தவரோடு இருப்பினும் தீர்க்க சிந்தனை வளரும்
- - - - - -நன்னாடன்