பேசாது கொல்

பேசுவது பேசி
பெரும் வார்த்தை வளர்ந்து
வார்த்தை போர்களின் இறுதியில்
வாடிப்போகும் மனம் .............

நீண்டு கொண்டிருக்கும்
நெடும் வார்த்தை சண்டையில்
கொடும் சொற்களின் வீச்சில்
கொல்லப்படுவதும் மனம் ............

கட்டில்லாத நாவு
கடும்வார்த்தை கூறி
காலத்தின் இறுதிக்கும்
காயம் சுமப்பதும் மனம் ............

ஆவேச குணம்
ஆணவ வார்த்தை
கொடிய கூற்று
குற்றுயிராய் கிடப்பதும் மனம் ........

ஆயிரம் வலிகள்
அனைத்தும் இருந்தும்
அமைதி வழியே ஆக சிறந்தது ............

கொட்டிய வார்த்தைகள்
கொலையை மிஞ்சும்
அமைதி ஒன்றே
அனைத்தையும் வெல்லும் ...............

பேசியே பிறரை
கொள்வதை தவிர்த்து
"பேசாது கொல் "
பெருமை கொள்!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : விநாயகமுருகன் (11-Aug-20, 8:03 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 189

மேலே