காதல்

பார்த்தாள் பார்வைத் தந்தாள் புன்னகைத்தாள்
சிரிப்பும் தந்தாள் புன்சிரிப்பாய் -இவளென்ன
பேசாமடந்தையோ என்று நினைக்க -எனைப்பார்த்த
அவளழகு விழிஇரண்டும் பேசிட
பேசும் இவள் விழிகள் பேசும்
மொழிதான் யாதோ என்று நினைக்கையில்
கொஞ்சும் தமிழில் என்மனம் குளிர
காதல் காதல் உன்மீது எனக்கு
என்று மௌனம் கலந்து வாய்திறந்து
குயிலாய் பாடி அழைத்தால் அவள்
அதைக்கேட்டு வானம் தொட்டது என்மனம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Aug-20, 8:04 pm)
Tanglish : kaadhal
பார்வை : 255

மேலே