நட்பாய் நாம்
சொல்ல வந்த கதை
மெல்லிய புன்னகையோடு
சொற்களால் விழைகிறேன்..
பந்தத்தில் சொல்லாத பாசமாய்!
மனதோடு பேசும் வாசகமாய்!
உரிமைகளில் அல்லாது
உணர்வுகளில் வாழ்கிறது
உடனிருக்கும் நட்புகள்...
நம் விருப்பம் நம் சோகம்
நம்கோபம் நம் தாபம்
உடன் உரைக்கும்
உயிர்ச்செடியாய்....
உள்வாங்கி வைத்திட்டும்
ஏளனம் பேசிடாது
ஏற்றம் உரைக்கும்
ஏனைய நட்புகள்
நமக்கு வசமாய்!
வாழ்வின் வரமாய்!
உயிரின் இழையோடு
நம்மைக்கொண்டாடும்
உணர்வாய் ஓர் உறவு
உயர்வாய் ஓர் நனவு
நம்மை நமக்கே
அடையாளமிடும்
நம் நட்பு வட்டங்கள்!
ஆழ்கடலில் உயிர்கொண்டு
அரங்கத்தில் உடல் வந்தாலும்
சபையே காணும் சங்குகள்....
அதனிலும் எம் நட்புகள்
எமக்கு வலம்புரிகளாய்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
கி.விஜயலட்சுமி