ஒரு பெண்ணின் ஏக்கம் கவிதை அல்ல கண்ணீர்

பிறக்கும் போதும் பெண் குழந்தையா என ஏளனமாய் பேசும் உறவினர்கள் ஒருபுறம்..
அடி எடுத்து வைத்து விளையாடும் குழந்தைகளின் வாழ்க்கையை சிதைக்கும் கூட்டம் ஒருபுறம்....
பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்புவதற்குள் மனத்தலவில் துயரம் தரும் கூட்டம் ஒருபுறம்....
இதையெல்லாம் கடந்து வேலைக்கு செல்லும் இடத்தில் ஆயிரம் துண்பங்களை சந்தித்து சகித்துக்கொண்டு முன்னோக்கி செல்ல...
ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் புதைத்து வாழ துவங்க...
யாரை நம்புவது என்ற குழப்பத்தில் அனைவரையும் எதிர் கொள்ள..
தன்னையும் மீறி அவள் ஒருவர் மீது வைக்கும் அன்பு, அவளின் நம்பிக்கை.. அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு பழகும் நபருடன் வாழ்க்கை முழுவதும் பயனிக்க விரும்பி அடுத்த அடி எடுத்து வைக்கும் போது ..நம்பிக்கை தகர்ந்து போகும் அளவிற்கு ஏற்படும் துரோகம் கொடியதிலும் கொடிது.
வீட்டிலும் அவள் உணர்ச்சியை ஏற்க மறுத்து அடுத்து ஒரு துணையை விருப்பமின்றி அவளுக்கு கட்டயாப்படுத்த
அதையும் தாங்கி.. கடக்க முடியாமல் கடக்க ..
வீட்டில் காட்டும் துணையும் மனதை உடைக்கும்போது..
அவளின் ஏக்கங்கள் புதைக்கபடும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்
ஒரு ஒரு பெண்ணிற்கும் ஒரு மனமுண்டு
அதில் ஆயிரம் கணவுகளும் ஆசைகளும் புதைந்து கிடக்கின்றன
அவளின் ஆசைகளும் கணவுகளும் புதைந்து போவதும்.... புத்துயிர் பெருவதும்
அவளை புரிந்து கொள்ளும் மனதை பொருத்தது.
கண்ணீர் மட்டுமே அதிகம் கடந்து வரும் பெண்களை .. உங்களின் மரியாதையாளும், அன்பாலும் நெகிழ்ச்சியடைய செய்யுங்கள்.

எழுதியவர் : கலைச்செல்வி (26-Nov-20, 8:33 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
பார்வை : 1220

மேலே