காதலின்றி வேறில்லை
❤️🧡💛💚💙💜🖤🤍🤍🤎❤️
*காதல் கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
❤️❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️
பெண்ணே !
உன்னை
நேசிக்கத்
தொடங்கியதிலிருந்து .....
நான்
தலையணையை
தலைக்கு வைத்து
படுத்ததே! இல்லை .....
உன் முகத்தை
ரசித்ததிலிருந்து
கண்ணாடியில்
என் முகம்
தெரிவதே! இல்லை.....
உன் போட்டோ
கிடைத்ததிலிருந்து
என் உதடுகள்
ஈரமாக இருந்ததே! இல்லை...
உன்னோடு
பேசியதிலிருந்து
நான்
இரவில்
உலராமல்
உறங்கியதே இல்லை.....
உன்னை
சந்தித்ததிலிருந்து
நான்
எதை பற்றியும்
சிந்தித்ததே! இல்லை....
உன்னை
கைப்பிடித்ததிலிருந்து
நான்
தன்னம்பிக்கையை
இழந்ததே! இல்லை.....
*கவிதை ரசிகன்*
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡