ஏறிவந்த ஏணி
புதிய பாதையில்
நடப்பதற்கு
உன் மனம் முடிவு
செய்த பிறகு ....!!
கடந்து வந்த பாதை
கண்ணுக்கு தெரியாமல்
கால் தூசுக்கு
சமமாக நினைத்து
கல்லும் முள்ளும்
என்றுதான் சொல்லும்
மேலும்
தனக்கு உதவியவர்களை
துச்சமாக கருதி
ஏறிவந்த ஏணி
தேவையில்லை
என்று மனது நினைக்கும்
மனிதா.. ஒன்று மட்டும்
நினைவில் கொள்...
உலகத்தில் உனக்கு
ஏற்பட்ட மாற்றங்கள்
சில சமயங்களில்
ஏமாற்றத்தை
கொடுத்துவிடும்...!!
அந்த சமயத்தில்
நீ வேண்டாமென
உதைத்து விட்ட ஏணியை
உன் மனம் தேடும் போது
அது உதவாமல் போகும்...!!
--கோவை சுபா