சுகம் சுகம் சுகம்
அப்பா அடித்து அரவனைப்பது சுகம்!!
அம்மா அள்ளி கொஞ்சுவது சுகம்!!
அண்ணன் கைகோர்த்து பள்ளி செல்வது சுகம்!!
அக்கவிடம் அடம் பிடிப்பது சுகம் !!
தம்பிக்காக விட்டுக்கொடுத்தல் சுகம் !!
தங்கையின் மழலை பேச்சி சுகம் !!
நண்பனை தன் உயிராக பார்ப்பது சுகம் !!
தோழியை தன் உடன் பிறப்பாக பார்ப்பது சுகம் !!
ஆசானை வணங்கி தாழ்மையுடன் நடப்பது சுகம் !!
காதலியை இமையில் வைத்து காப்பது சுகம் !!
காதலன் மனதில் நீங்கா இடம் பிடிப்பது சுகம் !!
கணவனுக்கு குழந்தையாய் இருப்பது சுகம் !!
மனைவிக்கு தந்தையாக காப்பது சுகம் !!
குழந்தைகளுக்கு நண்பனாக இருப்பது சுகம் !!
கடமையை செய்வது சுகம் !!
முதலாளிக்கு உண்மையாக இருப்பது சுகம் !!
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவது சுகம் !!
தேவை அறிந்து செலவிடுவது சுகம் !!
வறியோர்க்கு உதவுவது சுகம் !!
முதியோருக்கு அன்பு காட்டுவது சுகம் !!
சுகம் !!! சுகம் !!! சுகம் !!!
உண்மையான அன்பை வெளிப்படுத்துவது சுகம் !!