கபடமில்லா சிரிப்பு

கள்ளம் கபடமில்லாமல்
சிரிக்கும் குழந்தையை
பார்க்கும்போது ...!!

நம் உள்ளம் பின்னோக்கி
குழந்தைப் பருவத்திற்கு
சென்று விடும் ..!!

உதடும், கண்களும் இணைந்து
குழந்தைகளை போல்
நாம் சிரிப்பது எப்போது
என்ற எண்ணத்தில் ...??

வளர்ந்த பிறகு
சிரித்துப் பேசும் மனிதனின்
சிரிப்புப் பின்னால்
ஆயிரம் காயங்கள் ...!!

கவலையின்றி மனிதன்
குழந்தைகளை போல்
மீண்டும் சிரிப்பது எப்போது .!!..??
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Apr-21, 10:00 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 175

மேலே