தென்றல் என் கன்னத்தை வருடி முத்தமிட்டது

காலைத் தென்றல்
என் சாளரத்திற்கு வருகை புரிந்தது
குயிலின் தேனிசையை இதழில் ஏந்தி
சாளரத்தின் மெல்லிய திரை
ஒரு பாலரினா அழகில் தென்றலுடன் நடனமாடியது
உள்ளே நுழைந்த தென்றல்
என் கன்னத்தை வருடி முத்தமிட்டது
குயிலிசை என் நெஞ்சை தொட்டது !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-21, 10:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே