கவிதைக்காரி

ஒன்று
தெரியுமா
உங்களுக்கு...

உலகின்
மிக மிக அதிர்ஷ்டசாலி
ஒருத்தனை,
கவிதைக்காரி ஒருத்தி
வழி நடத்துகிறாள்.

அந்த
அதிர்ஷ்டசாலி
நான்தான்.

அவளே
ஒரு கவிதை
நானே
ஒரே ரசிகன்

எவ்வளவோ
பிரச்சினைகளை
சமாளித்திருக்கிறேன்,
கவிதைக்காரியின்
திட்டமிடுதலால்...

ஒரு
திட்டத்தை
ஆரம்பிக்கும் போதே,
அதற்கு மாற்றாக
திட்டம்-2 ம்
வைத்திருப்பாள்.

யாருக்குத் தெரியும்?
திட்டம் 3, 4 கூட
அவள் மனதில்
இருக்கலாம்.

அவ்வளவு
மூளைக்காரி
அவள்.

என்னைப்போல,
எல்லாவற்றையும்
கவிதையாக
கையாள்கிறேன்
என
நீங்களும்
இறங்கி விடாதீர்கள்,
ஏனெனில்

அந்த கவிதைக்காரி
உங்களோடு
இல்லை.

காரணம்
மூன்றாவது
பாரா...

ஆனால் ஒரே
ஒரு
வருத்தம்,

அவள்
இல்லாதபோது,
நான்
என்ன செய்வதென்று
மட்டும்
சொல்லாமல்
போய்விட்டாள்.

.

#கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (21-Sep-21, 12:57 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kavidhaikkaari
பார்வை : 110

மேலே