என் தேஞ்சி போன செருப்பு
என் தேஞ்சி போன செருப்பிது;
ஏன் என்று கேட்க நாதியத்து
தேம்பி தேம்பி அழுதே;
இப்போ
வாயில் ஓரத்திலே கிடக்கு
ஊர் எல்லாம் சுற்றி வந்து
ஓயாமல் உழைத்த செருப்பு
இப்போ
ஒரு புரோஜனமும் இல்லாது,
உதவாது என்னைப்போன்று
ஓரத்தில கிடந்து தவிக்குது, இந்த தேஞ்ச செருப்பு.
வேகமாக நடைய கட்டிய செருப்பு இது;
ஓய்ந்துபோன என்னைப்பாத்து
வெறுப்பத்தான் காட்டுது;
என் தேய்ந்து போன செருப்பு.
வாயில்லாத செருப்பு இது,
வழக்கம்போல் சுற்றாமல்
வாடித்தான் கிடக்குது.
பாசமாய் என் காலில் ஒட்டி பவனி வந்த செருப்பிது;
என்னை பல்லைக் காட்டி பரிகாசம் செய்தே இலிக்குது.
எடுபிடி போன்று என்னோடு சுற்றிவந்த செருப்பிது;
என்னையே பார்த்து எகத்தாளம் செய்யிது.
நேர்மை நேர்மை என்று பேசி
நேரத்துக்கு வீட்டுக்குவராது
என்னையும் தொனத் தொனவென்றே
தொல்லை கொடுத்த நீ;
முடங்கிப் போன முடவனாட்டம்;
முடங்கித்தான் போனேயே;
நேர்ந்த கதியைப் பார்த்தாயா என்றே
என்னைப்பார்த்து கேட்பது போல் இருக்குது.
நேற்றுவறை கம்பீரமாய் நடைபோட்ட நீ,
கம்மிய குரலில் பேசுறாயே என்றே,
கவலைப்பட்டே கேட்குது.
கடமை கடமை என்று சுற்றினாயே
காது அறுந்த பையாட்டாம்,
கடைசியில வந்த கெதி என்னவென்றே கேட்குது.
காலம் போன காலத்திலே
கடு கடுன்னு பேசாது
கால ஆட்டிக்கிட்டு கட்டைய கிடத்து என்றே கடுப்பாய் பேசுது.
புறக்கணிக்கப்பட்ட செருப்பிது,
புரியாது தவிக்குது,
புதிரான புதிரிது,
நான் புத்திர சோகத்தில் கிடப்பதைப் பார்த்து
வருத்தம் தான் படுகிறது.
காடு மேடு சுத்தி என் காலுக்கு கவசமாய் இருந்த செருப்பு;
கண்ணீர் விட்டுத்தான் ஆழுகின்றது.
ஊருகாடு சுத்திய செருப்பிது
உதவாக்கறையாய் கிடக்குது.
பல பலன்னு பாலீஷ் போட்டு போன செருப்பு பல்லைக்காட்டி இலிக்குது.
ஜோடியாய் சுத்தி வந்த செருப்பு இது;
சும்மாத்தான் வாசல் மூலையில கிடக்குது.
எத்தனைதான் இருந்தாலும்
பெத்த பிள்ளைகள்போல் இல்லாது
விசுவாசத்தத்தான் காட்டுது
வெளியபோக நினைக்கும்போதே
வெரும் காலலோடு போகவிடாது;
கல்லு முள்ளு குத்தாது காலத்தான் பாதுகாக்குது.
நெஞ்ச கீறி வேடிக்கை பார்க்கும் பாசங்களுக்கு மத்தியிலே
நெசமாகவே என்னுடன் ஒட்டியே;
நேசத்தைக்காட்டி என்னையே நெகிழ வைக்கிது.
இந்த பாசமான செருப்பு.
கடையிலதான் வாங்கிய பாசமான செருப்பு இது,
பைசாவுக்கு புரோஜனம் இருக்காது என்று நினைத்தது போக;
தனிமைய தீர்க்க தயங்காது என்னுடன் ஒட்டியே வந்து
நடக்கவைத்து;
உள்ளத்தில அமைதிய ஏற்படுத்துது.
சோகமாய் கிடந்தால்;
சுத்தித்தான் வருவோமே
என்று
சோறுபோட்டு வளர்க்காத செருப்பு இது,
சொந்த பந்தத்தை காட்டுது.
வாயில்லாத செருப்பு இது;
வழியில போகும் போது
அசிங்கத்தை மிதித்தாலும்; முள் தைத்தாலும், கல்லுல அடிபட்டாலும்,
ஆ என்று என்னை கத்தவிடாது;
அசிங்கப்படுத்தாது இருக்குது.
பசிக்கு முன்னே பாலாப்போன பாசத்தை ஊட்டிவளர்த்த உறவுகள் உதைப்பதையும் உருமுவதையும் பார்க்கும் போது;
பழுதான இந்த செருப்பு பாசமாய்,
என்னுடன் ஒட்டியே இருக்க தவிக்குது.
என்னை விட்டு வெகுதூரம் போகாத செருப்பிது இது; விரும்பியே என்காலடியில கிடக்குது.
வெறுத்து எத்திவிட்டாலும்
பொறுத்தே, வேறு திசைபோகாது
வேண்டாத பாசத்தை கொட்டுது;
வீட்டுக்குள்ளே எடுத்துவர முடியாவிட்டாலும்,
விருந்து தான் படைக்க முடியாவிட்டாலும்,
வெறுக்காது நான் தினமும், துடைத்துவைப்பதைப் பார்த்தே,
நன்றிக் கடன் தீர்க்க என் மனசு நினைக்கிது.
காது அருந்தாலும் கழட்டிப்போட மனசு இல்லாம
கச்சிதமாய் தைத்தே நான் போட்ட செருப்பை பாதுகாக்க என் மனதுதான் துடிக்கிது.
நடக்கத்தான் உதவும் செருப்பு; நடிக்கத்தெரியாத செருப்பு;
ஏன் இந்த பாசம் என்று செருப்பைக் கேட்டதற்கு,
என்னைப்போல உன் ஆயிலும் தேய்ந்து தேய்ந்து
கொண்டிருப்பதால்,
மனுசங்களை நினைத்து மனம் நோவாது திடமாய் இரு என்கிது.
இத்தனை காலம் என்னை தூக்கி எறியாமல் இருப்பதற்கு;
நன்றி விசுவாசம் காட்டுறேன் என்றே என்னைப் பார்த்து கூறியது.
எடு செருப்பை போடு நடையை
பொல பொலன்னு பொலம்பாது;
பொழுத போக்க பொடிநடையாய் சுற்றிவருவோம் என்றே வெளியே போக தவிக்குது;
எதுத்து பேசாத என் செருப்பிது;
என் கூடவே இருக்கவே விருப்பம் காட்டுது.
பெத்த குழந்தைகளாலேயே காயம் பட்ட என் நெஞ்சே இனியாவது கேள்;
கவலைப்படாதே;!
கண்ணீர் வடிக்காதே;;!
கவலைப்பட்டு, கண்டதை சுமக்காதே;!
பொத்தி பொத்தி தோளுல போட்டு வளர்த்த பெத்த பிள்ளை என்றாலும்,
கொத்தி கொத்தித் தான் பார்ப்பார்கள் என்பதை இனியாவது உணர்ந்து;
காலணிணை துச்சமாய் நினைக்காதே.
உன் காலம் முடியும் வரை நான் கலட்டிப்போடாது இருக்க,
நெஞ்சே நீ, நான் விரும்புவதை கேள்
வலிகளை சுமந்தது போதும் நெஞ்சே;
வழிப்பாதையில் படும் வலியை உனக்காக சுமக்கும் காலணியை இனியாவது வெறுக்காதே,
மிதியடியை மதித்தாலும் மதித்திடு
வயோதிகம் வந்தாலும் வழக்கம்போல் உன்னுடன் வர விரும்புவது செருப்புதான்
என் உறவுகள் அல்ல.
தேஞ்சி போன செருப்பானாலும் தீஞ்சிபோன உறவல்ல
என் பாசமுள்ள செருப்பிது