நாட்கள் வாரங்கள் வருடங்கள் மற்றும் நாம்

புத்தாண்டு வந்து செல்கிறது ஆண்டு ஒருமுறை
குடியரசு தினம் வருகிறது ஆண்டில் ஒரு முறை
சுதந்திர தினம் மலர்கின்றது ஆண்டு ஒரு முறை
நாம் பிறந்த நாளும் வருகிறது வருடம் ஓர் நாள்
ஆண்டில் ஒருமுறை கல்யாண நாள் சிரிக்கிறது
மற்ற ஏனைய பண்டிகைகளும் வந்து செல்கிறது
வாரம் ஏழு நாட்கள் 52முறை பிறந்து மறைகிறது
24 மணி, 365 நாட்கள் மின்னல் போல் மறைகிறது
காலம் நேரத்துடன் நாமும் வளர்ந்து தேய்கிறோம்
இதுவரை வாழ்க்கையில் நாம் உணர்ந்தது என்ன?
மீதமுள்ள வாழ்வு நமக்கு என்ன வைத்திருக்கிறது?
இதுவரை வாழ்ந்த காலம் மகிழ்ச்சியான நாட்களா?
இனி வரப்போகும் நாட்கள் நிறைவாக அமையுமா?
எதையோ நினைப்போம் ஏதோ ஒன்று செய்வோம்
திடீரென நம்மை கவனித்தால் மகிழ்ச்சி பொங்கும்
கொஞ்சம் கூர்ந்து கவினித்திடில் துன்பமே தங்கும்
சில விஷயங்கள் நமக்கு உண்மையாக தோன்றும்
பல விஷயங்கள் பொய்யேதான் அன்றும் இன்றும்
அறிவுடன் சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றிடினும்
நாம் மனிதனா அல்லது கருவியா எனும் சந்தேகம்
உங்களுக்கு மட்டும் இல்லை சாமி எனக்கும் தான்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Jan-22, 11:11 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 60

மேலே