ஆடாதேஆடாதே
ஆடாதே,,,,ஆடாதே....
அளவைத்தாண்டி ஆடாதே!
கொள்ளாதே....கொள்ளாதே...
ஆசை அதிகம் கொள்ளாதே!
நிறைந்த கிண்ணத்தை
மேலும் நிரப்பினால்
வழிந்து வீணாய்ப் போகும்.
ஒருக்காலும் நிலைக்காது.
ஈட்டி முனையை
மேலும் கூராக்கினால்
ஒடிந்து மழுங்குமேத்தவிர
ஒருபோதும் கூராகாது.
எதுவும் அளவோடு இருந்தால்தான்
ஆனந்தமாய் அனுபவிக்கலாம்.
அளவைத் தாண்டினால்
அனுபவம் வேறாய் மாறிப்போகும்.