தெளிந்ததா பித்தம்
" தெள்ளிய சித்தம்!
ஆசை உணர்வதன் நிமித்தம்,
செய்தது தன்னை தத்தம்,
விளைந்தது குத்தம்,
நிலை உணராமல் துள்ளிய சித்தம்,
உணர்ந்த பின் துடிக்குது நித்தம்,
தேடுது பிராயச்சித்தம்,
காலங்கடந்து தெளிந்த பித்தம்,
இன்னும் ஆக்கலையே மனதை
முழுசும் சுத்தம்!
மிச்சம், மீதி இன்னும் விழி
வழி போடும் சத்தம்,
அதை விலக்க, விளக்க,
வழி தெரியாமல் வடியுது
இதயத்தில் ரத்தம்."