என்னை துரத்தும் உன் நினைவுகள் 555

***என்னை துரத்தும் உன் நினைவுகள் 555 ***


என்னுயிரே...


உன்னை முதன் முதலில்
கண்டா நாள் முதல்...

இரவெல்லாம் உறக்கமில்லை
உன்னையே நினைத்து கொண்டு...

நாம்
பழகிய நாட்களில்...

சந்திக்கும் நிமிடத்திற்காகாக
இரவெல்லாம் கண்விழித்திருந்தேன்...

உறங்கினால் மணித்துளிகள்
கரைந்துவிடுமோ என்று...

இனி நம் சந்திப்பு
நிகழப்போவதில்லையடி...

நிம்மதியாக
உறங்க நினைக்கிறேன்...

ஊர் உறங்கும்
நேரத்தில் நானும்...

உன் நினைவுகள் என்னை
உறங்கவிடுவதில்லை...

நான் மறக்கும் அந்தநாள்
என் வாழ்வின் இறுதினாலோ...

அச்சம்
கொள்ளுதடி என் உள்ளம்...

உன்னையும்
உறக்கத்தையும் தொலைத்துவிட்டு...

உணர்வின்றி உலாவருகிறேன்
பூமியில் நானும் தினம் தினம்.....


***முதல்பூ .பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (26-Feb-22, 5:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 412

மேலே