"மெடிக்கல் ரெப்"

நான் மருத்துவர் அல்ல - ஆனால்
மருத்துவம் தெரியும் எனக்கு...

நான் ஆசிரியர் அல்ல - ஆனால்
ஆங்கிலம் தெரியும் எனக்கு...

நான் கணினி பொறியாளர் அல்ல - ஆனால்
கணினி தெரியும் எனக்கு...

நான் பொருளாதாரம் படிக்கவில்லை - ஆனால்
வருமான வரி செலுத்துகிறேன்...

நான் அழகுக்கலை நிபுணர் அல்ல - ஆனால்
அழகுக்கலை தெரியும் எனக்கு...

நான் நடிகன் அல்ல - ஆனால்
நடிக்க தெரியும் எனக்கு...

நான் விளையாட்டு வீரன் அல்ல - ஆனால்
பைக் ரைடிங் தெரியும் எனக்கு...

நான் யார் தெரிகிறதா..?

நான் தான்
"மெடிக்கல் ரெப்"

பல திறமைகள் உடைய
ஆற்றல் மிக்க "இளைஞன்"

எழுதியவர் : Anonymous (4-Oct-11, 10:06 am)
பார்வை : 363

மேலே