என் சுவாசத்தில் கலந்த சுவாசமே 555

***என் சுவாசத்தில் கலந்த சுவாசமே 555 ***
பொன்நிலாவே...
தினம் நான் உறங்கும் நேரம்
இமைகள் மூட மறுக்கிறது...
இமை திறக்கும் நிமிடம்
நீ வரவேண்டும் என்பதற்காக...
கண்களை திறக்காமலே
கனவு காண்கிறேன்...
நீ
என்னை எழுப்புவதற்காக...
அறிவுக்கு தெரிகிறது
மனதுக்கு தெரியவில்லை...
நாம்
மணம் முடிக்கவில்லை என்று...
தினம் தேதி
பார்க்கும் போதெல்லாம்...
நாளை வந்துவிடுவாய் நாளை
வந்துவிடுவாய் என்றே செல்கிறது...
உன் முகம் காணாத எனது
ஏக்கம் நீ அறிவாயோ...
நீ தீட்டும் மை மட்டுமே உன்
விழிகளில் இருக்க வேண்டும்...
வாடிய கருமை
இனி இருக்கலாமா...
இரு முயல்கள் விளையாடும்
உன் கொங்கைகளில்...
நான் முகம் புதைத்து
உறங்க வேண்டும்...
அணில் கொத்திய
பழம் இனிக்குமாம்...
தினம் அணிலாக நீ கடித்து
கொடுக்க வேண்டுமடி கனிகளை...
என் உயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***