உந்தன் விழிகள்

உன்னை நான் முதல் முதலாய்ப் பார்த்தபோது
உந்தன் காந்த விழிகளின் ஓரம்
என்மனதை மயக்கும் மது ததும்புவது கண்டேன்
என்மனதை உன்னிடம் தந்தேன் பின்னே
உன்னோடு பேசிப்பழகையில் உன் விழிகளில்
என்னை உன்னோடு பிணைக்கும் அன்பு
சுரப்பதைக் கண்டேன் பின்னே உன்கன்னத்தில்
முத்தம் நான் இட்டபோது என்னை நீ
கட்டி அணைத்தபோது அதே உன் விழிகளில்
காமமும் சுடர்விட்டு எரிவதைக் கண்டேன்
அப்பப்பா உன் விழிகளில் நீயோர்
நடனமாதை அல்லவா பூட்டிவைத்திருக்கிறாய்
உன்மனதில் எழும் சலனங்களை அவள் வெளிக்காட்ட
லயமொடு ஜதி சேர்த்து உன்விழிகள் நடனமாட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Apr-22, 1:48 pm)
Tanglish : unthan vizhikal
பார்வை : 179

மேலே