வா என்றது பருவம்

வா என்றது பருவம்;
வதைக்காதே என்றது உருவம்;
தா என்றது இதயம்;
தறவா என்றது இதழும்;
தவிக்காதே என்றது கரமும்;
தடுமாறாதே என்றது விழியும்;
தாங்கிடு என்றது நிழலும்;
தழுவு என்றது பொழுதும்;
தள்ளி போய்விடு என்றது பெண்மை;
தருவாயா என்றது ஆண்மை
அமைதியை இழந்தது மனசும்;

வா என்றது வானம்
வடிக்கிது இந்த நிலவும்;
வரவா என்றது உதயம்;
தறவா என்றது பொழுதும்;
தவறா என்றது புவியும்;
உறவா என்றது இரவும்

அட
வா வா என்றது உறவும்;
வாழ் என்றது வயதும்;
வருத்தாதே என்றது உயிரும்;

இதயம் அது இதயம் ,
ரகசியப் பெட்டகமானது இதயம்;
அது இதமாய் பழகிடத் துடிக்கிது நிதமும்;
இரவும் பகலும் தேடும்;
இருவர் உள்ளத்திலும் ஆசையைத் தூவிம்;

உடலும் உடலும் சேரும் ;
ஓருடலாகி இதமாய் பதமாய் வாடும்;
உறவும் உறவும் வாட்டும் ;
அது இனம் புரியாத பயத்தைத் தந்தே பதைக்கும்;
இரவும் இரவும் தேடும்,
இருவரும் சேர்ந்தால் இதய வாசல் திறக்கும்;
அங்கு காதல் தென்றல் வீசியே மணக்கும்;
காமத் தீ மூட்டியே வாட்டும்;
மயக்கும் இது மயக்கும் இருவரையும்,
தயங்க வைத்தே மயக்கும்;
அட,
வா என்றது பருவம்;
வழக்காடாதே என்றது உடலும்;
உரசவா, (உரச வா) என்றது உதடும்;
உசுரைத்தா என்றது மனசும்;
உறவா என்றது உயிரும்;
உறவாடு என்றது பிடிவாதம்;
உணவாகு என்றது ஆசையும்;

அட, வா; என்றது பருவம்;
வடிக்காதே என்றது வதனம்;
சொட்டாதே என்றது அழகு;
கட்டாதே என்றது வெட்கம்;
கொட்டாதே என்றது பாசம்;
வெட்டாதே என்கின்றது விழிகள்;
தட்டாதே என்றது உள்ளம்;
வதைக்காதே என்றது வயது;
வழியாதே என்றது அசடு;
வடிக்காதே என்றது உதடு;
வழக்காடாதே என்றது மனசும்;
சிக்காதே என்கின்றது பருவம்;
சினுங்காதே என்றது செவ்வாயும்;
சிதையாதே என்றது தேகம்;

அட; வா; வா; என்றது நிலவும்
சுமக்காதே என்கின்றது கோபம்;
சுவைக்காதே என்கின்றது நாணம்;
விளைடாதே என்பது தேகம்;
விடாதே என்கின்றது மோகம்;
தொடாதே என்றது மௌனம்;
படுக்காதே என்கிறது பள்ளியறை;
படுத்தாதே என்றது கள்ள உரை;
சுடாதே என்கின்றது சுகம்;
தொடாதே என்றது முகம்;

பிடிகொடுக்காமல் பிடிவாதம் பிடித்தது பெண்மை
பிடிவிடாமல் தவிக்க விட்டது ஆண்மை;
வெட்கம் அறிந்தும்,
வெட்கை புரிந்தும்,
போதும் போதும் போய்வா என்றது பொழுதும்;
பொய்தானே என்றது இரவும்.
புரிந்தால் போதும் என்றது இருவர் மனமும்;

வா என்றது பருவம்;
வதைக்காதே என்றது உருவம்;
பாயும் அலையும் படுத்துறங்கவா என்றது;
பகைக்கும் நிலவும்
பசியைத்தீர் என்றது

அடவா என்றது பருவம்;
வதைக்காதே என்றது உருவம்;
களைந்து வந்தமேகம்;
காதல் மோகம் கொண்டே கூடும்
சொட்டும் சொட்டும் தன்தாகம் தீரும்வரை சொட்டும்;
கொட்டும் கொட்டும் தன் விகரதாகம் தீரும் வரை கொட்டும்;
அட
வா என்றது பருவம்
வந்தே விருந்தாகு என்றது வயதும்.

குமுத விழிகள், அமுதம் படைக்க;
குழைந்து வந்த வெட்கம் குளிர்ந்து போக;
கொடுக்க வந்த வேலையிது;
கொட்டித்தீர்க்க தவிக்கும் ஆசையது;
எட்டிப்போகாத வேலையும் அது
எட்டிப்பார்த்த இடையும் தவிக்க
ஒட்டிப் பழகும் பொழுதுமது;
தட்டிக்கேட்காத கரங்கள் அது;
தடுமாற வைக்குது நாணம்;
அங்கே தவிக்குது மௌனம்;
தடை போட வில்லை இரவும்;
விடை கொடுத்ததோ இந்த உடையும்;
உயிரை வதைத்ததோ இந்த உடலும்;

அடவா என்றது பருவம்;
தா என்றது பொழுதும்;
தயங்காதே என்றது மனமும்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (16-Jun-22, 10:10 pm)
பார்வை : 131

மேலே