காதல் ரங்கோலி என்மனதில்

சோலைக் குளிர்ப்பார்வை வான்மேக நீள்கூந்தல்
நீலவிழி கள்மீன்கள் போல அசைந்திட
கோலம்போ டும்காதல் ரங்கோலி என்மனதில்
மாலை எழில்பொழு தில்

--ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jun-22, 10:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே