செம்புளி
கொலுத்து செவந்த தேகமும்
குறுகுறுத்த உன் பார்வையும்
எம்மனசை விட்டு அகலாம
பரவிக் கிடக்கு மனம்பூரா
எட்ட நின்னு பார்வையால
வருடிக் செல்லும் செல்லப்
பெண்ணே கிட்ட வந்துயெம்
மனசத் தொட்டுச் சொல்லு
உங்காதலை...
நீ சொல்லும் வார்த்தைக்காக
ஏங்கிக் கிடக்கு ஏவுசுரு
ஒரு நிமிஷமும் தாமதிக்காம
இங்க வந்து சேரு...
நீ கொஞ்சும் மொழிகேட்க
என் செவியேங்கிக் கிடக்கு
வந்து அணைச்சு சொல்லுயென்
நினைப்புதான் நெஞ்சுமுட்டி கிடக்கு...
ஏக்கந்தீர எச்சி ஊரும்
உன்னைக் கட்டி அணைக்க
காத்தி ருக்கேன் வந்துயென்
கிட்டநில்லு வாகாயிருக்கும் அணைக்க...