அனுபவம் ஒரு ஆசன்

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

*அனுபவம் ஒரு ஆசன்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆


#அனுபவம்

ஞானத்தைக் கொடுக்கும்
போதிமரம்...!!

அடிக்காமல்
திட்டாமல்
தேர்வு வைக்காமல்
பல பாடங்களை
கற்றுக் கொடுக்கும்
பள்ளிக்கூடம்...!!

சிலர்
கேட்டு
பெற்றுக் கொள்வார்கள்..!!
பலர்
பட்டு தெரிந்துக்கொள்வார்கள்..

கைகள் இருந்தாலும்
அனுபவ விரல்கள்
இல்லையென்றால்
ஆகப்போவது
ஒன்றுமில்லை....!!!

மனிதர்களுக்குள்
சுவர்கள் இல்லாமல்
கட்டப்பட்டும்
பல்கலைக்கழகம்.....!!

ஏற்றம்மிக்க
ஏட்டறிவுக் கூட
ஆற்றல்மிக்க
அனுபவ அறிவிடம்
அடிக்கடி
தோற்றுத்தான் போகும்...!!

எதையும்
செய்யாதவர்களை
இது திரும்பிக் கூட
பார்க்காது.....
தவறாக செய்தாலும்
தவறாமல் செய்பவர்களை
விரும்பி பார்க்க போகாது...

ஆயிரம்
படித்திருந்தாலும்....
இது இல்லை என்றால்
ஆகச் சிறந்தது
எதுவும் இல்லை....!!!

துரோகம்
ஏமாற்றம்
இழப்பு
வேதனை
கஷ்டம்
துன்பம்
பிரிவு
தண்டனை
தவறு தப்பு
வாழ்நாட்கள்
இவைகளையெல்லாம்
கடந்து சென்றால்தான்
இந்த புதையலை
அடைய முடியும்....!!

அவ்வளவு எளிதில்
யாரிடமும் வராது....!!
வந்து விட்டால்
ஆயுள் உள்ளவரை
விட்டுப் போகாது....!!

*கவிதை ரசிகன் குமரேசன்*


🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

எழுதியவர் : கவிதை ரசிகன் (12-Sep-22, 8:36 pm)
பார்வை : 64

மேலே