அழகாய் வீட்டினுள்

மாடும் இல்லை மேய்ந்திட நிலமும்
எங்கும் இல்லை யாவும் வீடாய்
மேய்த்திட உரிய ஆளும் இல்லை
ஆனால் பாலும் தயிரும் மிகையாய்

கூலியை பெறவே வேலை செய்தது
பழைய காலமே இன்றோ ஆதயம்
மட்டுமே முதன்மை கூலி என்பது
நேர்மை பேசுவோர் பெறும் பிச்சை

வணிகம் இன்று உண்மையை மறந்தே
யாதெனில் எனினும் எல்லாம் கள்ளமாய்
அடர்வாய் பொய்யைக் கூறியே எதையும்
எளிதாய் விற்க்கும் நல்ல வணிகரே

தொலைக்காட் சிகள்இன் றோமிக கொச்சையாய்
விழிப்புணர் நிகழ்ச்சி என்னும் பேரில்
கழிவுக் கால்வாய் போன்று பலதை
அழகாய் வீட்டினுள் தருவதே வேலையாய்

மரத்தை இழைக்கையில் வருமே சேதாரம்
காய்கறி அறுக்கையில் கிடைக்கும் சேதாரம்
இவைகள் யாவும் வாழத் தேவையாம்
தங்கச் சேதா ரமோபே ரசையே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Sep-22, 3:25 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : azhagaai veettinul
பார்வை : 50

மேலே