காதலெனும் நதியினிலே

காதலெனும் நதியினிலே!
🌹🌹🌹🌹🌹🌹🌹

காதலெனும் நதியினிலே கடற்கன்னி
நீந்துகிறாய் /
மோதுகின்ற பேரலையால் மூச்சுவிடத்
திணறுகிறேன் /

கண்களிலே பட்டவுடன்
கலந்தாயே
நெஞ்சமெலாம் /
மண்ணுலகில் எனக்கெனவே மலர்ந்தாயே
தாமரையாய் /

பூவாகப் பொன்னாகப் புன்னகையாய்ப்
பூரித்தாய் /
தாயாக மகளாக
தாலாட்டி
மகிழ்ந்தாயே /

உப்பாக என்னுடைய
உள்ளத்திலே
கரைந்தாயே /
தப்பேதும் இல்லாத
தாரகையாய்
மிளிர்ந்தாயே!

சிப்பிக்குள் முத்தாக
சிலகாலம்
பொறுத்தாயே /
இப்போதோ என்தோளில் எழில்மாலை
ஆனாயே !

ஒருவாழ்க்கைப் போதாதே
ஓருலகம்
காணாதே /
பெருநதியில் காதலொடு
பிரியாது
நீந்திடவே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (29-Oct-22, 7:21 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 222

மேலே