காதல் மனம்
காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
கொள்கையும் மாறலாம்
இந்த மாற்றங்களை
தாங்கிக் கொள்ளும்
மனிதர்கள்
"காதல் மனம்"
தோல்வியை தழுவும்போது
கவலைக் கொண்டு
கடந்து வந்த
காதல் பாதையை
மறக்க முடியாமல்
தவிக்கின்றார்கள்...!!
காதல் கொண்ட மனமோ
காதலை இழந்த பிறகும்
காதலை நினைத்தே
வாழ்ந்திட துடிக்குது...!!
--கோவை சுபா