முட்டாள்களின் ஆயுதம்

அன்பில்லா வஞ்சகத்தின்
ஆரம்பம்
ஆற்றலிலா மனதின்
மாயை
இன்பம் தேடிய
இயலாமையின் தீவிரம்
ஈடு கெட்ட முடியாத
இழப்பினை ஏற்படுத்தும்
எண்ணங்கள்
உயிரைக் காவு வாங்கும்
உள்ளத்தின் வக்கிரங்கள்
ஊற்றாய் பிறக்கும்
நொடியின் நியாபகங்கள்
எல்லையிலா வன்மத்தின்
சாயங்கள்
ஏவுகணையாய் வெடிக்கும்
மதிப்பில்லா வார்த்தைகள்
ஐ வகைஒழுக்கத்தை
மறக்க செய்து
ஒற்றுமையை
உடைத்தெரிந்த
ஓசையின் உச்சத்தால்
தன்நிலை மறந்து
ஔவியம் பருகி
கலைக்கொம்பநென கத்தும்
ஓர்
முட்டாள்களின் ஆயுதம்

கோபம்

எழுதியவர் : சிம்மயாழினி (17-Nov-22, 1:37 am)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 77

மேலே