மண் சிவக்க மழை பெண் சிவக்க

மண் சிவக்க மழையும்
பெண் சிவக்க ஆணும்

பொன் சிவக்க கனலும்
வான் சிவக்க அந்தியும்

கரம் சிவக்க கொடையும்
கன்னி சிவக்க இடையும்

கனி சிவக்க காயும்
கண் சிவக்க வழி மேல் விழியும்

எண்ணம் சிவக்க எழுத்தும்
கன்னம் சிவக்க காதலும்

இதழ் சிவக்க இங்கிதமும்
இதயம் சிவக்க இடம்மாறலும்

நீ சிவக்க நானும்
நான் சிறக்க நாணும்

உனது கண்ணும்
வேண்டுமடி யென் தோழி...

எழுதியவர் : பாளை பாண்டி (26-Mar-23, 6:30 am)
பார்வை : 124

மேலே