ஐ....! 10/07/2023
ஐயனின் ஐயை ஐந்துநோக்கி
ஐங்கரன் நாமம் நாவில் தேக்கி
ஐந்தெழுத்து மந்திரம் மனதில் இருத்தி
ஐயமின்றி தொழுதால் நம் வாழ்வை
ஐயப்படுத்துவான் ஐயம் ஒன்றுமில்லை.
ஐயம் நீங்கிடின் ஜெயம் ஜெயம்தானே.
ஐயன் வள்ளுவன் படைத்திட்ட வான்புகழ்
குறள்வழி நாமும் நடந்திடின் வாழ்வின்
ஐயம் நீங்கி ஐயனின் திருப்பாதம்
ஐயமின்றி அடைந்திடுவோம். ஐயம் ஏதுமில்லை.
ஆங்கில எழுத்தின் ‘ஐ’ உணர்த்துவதோ
அகங்காரத்தை... ஆணவத்தை... ஆர்பரிப்பை.
தமிழின் ’ஐ’ யோ அழகையும் வியப்பையும்
தாராளமாய் அள்ளி வழங்கி கொண்டாடுகிறது.
ஐயோ என்று அழைத்திடாதீர் மனைவியை அழைத்ததாக
காலன் பாசக் கயிற்றோடு வந்திடுவான்
ஐயமின்றி என்றொரு ஐதீகம் இங்குண்டு.
ஐயோ என்று இனி சொல்லவேண்டாம்
ஐ என்று சொல்லி வாழ்வை ரசித்திடுவோம்…..!

[சிங்கப்பூர் பொழில் பண்பலையில்
ஒலிபரப்பான கவிதை]

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Jul-23, 8:14 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ai
பார்வை : 86

மேலே