கண்களிலோ கவிகம்பன் சுவைக்காதல் நாடகம்

பெண்னுந்தன் இதழினில் வெண்முத்துக் களினாடல்
கண்களிலோ கவிகம்பன் சுவைக்காதல் நாடகம்
வெண்ணிலவோ உனதுமுகத் தினில்அரங்கே றும்அழகாய்
எண்ணிலாத கனவுதனில் எனதுமனம் நீந்திடும்


பெண்னுந்தன் செவ்விதழ் தன்னில்வெண் முத்தாடல்
கண்ணில் கவிகம்பன் காதலின் நாடகம்
வெண்ணிலவோ உன்முக மேடை அரங்கேறும்
பெண்ணிலாஎன் னில்உன் கனா

பெண்னுந்தன் செவ்விதழ் தன்னில்வெண் முத்தாடல்
கண்ணில் கவிகம்பன் பூங்காதல் -- விண்ணின்நல்
வெண்ணிலவோ உன்முக மேடை அரங்கேறும்
பெண்ணிலாஎன் னில்உன் கனா

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-23, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே