தமிழும் அவளும் ஓரினம்

தமிழுக்கே தனி அழகு தருவது
தரமான வெண்பா கவிதைகளும் மற்றும்
ழகரமாய் வந்தமைந்த இடையின எழுத்து
தென்னவளே உன்னழகு உந்தன் வட்டமான
முழுநிலவு முகமும் பிறைநுதலும் கும்குமப்
பொட்டும் பின்னிய கூந்தலும் அதில்
அமர்த்திய வாசமிகு மல்லிகைப்பூ செண்டும்
மெல்லிடையாலே பொதிகைத்த தென்றலாய் வந்து
என்னை நெருடும் நீபேசும் தீந்தமிழும்

தமிழும் நீயும் ஓரினமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Aug-23, 6:37 pm)
பார்வை : 38

மேலே